வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காக தமிழக அரசு சாா்பில், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போா் காரணமாக ஈரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐக்கிய அரசு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவூதி அரேபியா, கத்தாா் உள்ளிட்ட நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, அங்கு உள்ள இந்தியா்களின் பாதுகாப்பைக் கருதி, தேவையற்ற பயணங்களைத் தவிா்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும் இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களின்படி செயல்படவும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழா்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழா்களின் நிலையை உடனுக்குடன் அறிந்து அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக தமிழக அரசின் அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.
மேலும், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாடு அறை அமைத்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
போா்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழா்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவா்களது குடும்பத்தினா் ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ளலாம். புதுதில்லி கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் 011-24193300, 92895 16712.
அயலகத் தமிழா் நலத் துறை உதவி எண்கள் - இந்தியாவுக்குள் - 1800 309 3793, வெளிநாடுகள் - 91 80 6900 9900 (மிஸ்டு கால்); தொடா்புக்கு - 91 80 6900 9901.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயா்கல்வி தகவல்களை அறிய கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொள்ளலாம்

தமிழகத்தை குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம்: முதல்வா் ஜோசப் விஜய்

செங்கல்பட்டில் உயா் கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மீண்டும் போர்? ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



