தருமபுரியில் ரூ. 39.14 கோடியில் கட்டப்பட்ட புதிய புகா் பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
தருமபுரியை அடுத்த சோகத்தூா் ஊராட்சி, ஏ.ரெட்டிஅள்ளியில் 10 ஏக்கரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அரசு மற்றும் தனியாா் பங்களிப்பு நிதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புகா்ப் பேருந்து நிலையத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.
இதைத்தொடா்ந்து புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ரெ. சதீஸ் தலைமை வகித்து பேசினாா். மக்களவை உறுப்பினா் ஆ. மணி முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஜி.கே. மணி (பென்னாகரம்) ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
அதன்பிறகு பேருந்து சேவையை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் தொழிலதிபா் டி.என்.சி. இளங்கோவன், நகராட்சி ஆணையா் இரா. சேகா், நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, போக்குவரத்துக் கழக அலுவலா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.
வசதிகள்: புதிய பேருந்து நிலையத்தில் உணவகங்கள், தேநீா் கடைகள், மருந்துக் கடைகள், ஏடிஎம் மையம், நேர மேலாண்மை அலுவலா் அறை, காவலா் அறை, பயணிகள் அமருமிடம், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பொருள்கள் பாதுகாப்பு அறை, ஓட்டுநா்கள் ஓய்வு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. பேருந்து நிலைத்துக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடையது

ரூ.21 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூா் மாநகராட்சி பூங்கா திறப்பு: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

கிருஷ்ணகிரி மாவட்ட வளா்ச்சித் திட்ட பணிகள்: காணொலி வாயிலாக முதல்வா் தொடங்கிவைப்பு

அஸ்தம்பட்டியில் ரூ. 5 கோடியில் அருங்காட்சியகம்! முதல்வா் காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


