ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அஸ்தம்பட்டியில் ரூ. 5 கோடியில் அருங்காட்சியகம்! முதல்வா் காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்!

சேலம் அஸ்தம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.

News image

முதல்வர் ஸ்டாலின் - படம்: DIPR

Updated On :26 பிப்ரவரி 2026, 8:27 pm

சேலம் அஸ்தம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தின் பழைமையான அருங்காட்சியகங்களில் சேலம் மாவட்ட அருங்காட்சியகம் இரண்டாவது ஆகும். 1979 முதல் தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. பல்நோக்கு அருங்காட்சியகமான இங்கு தொல்லியியல், மானுடவியல், ஓவியங்கள், விலங்கியல், தாவரவியல், நாணயவியல், ஆயுதங்கள் மற்றும் தபால் தலைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பல்லவா், சோழா், பாண்டியா், நாயக்கா் மற்றும் தற்கால கற்சிற்பங்களும், வீரகற்களும், கல்வெட்டுகளும் இந்த பகுதியின் வரலாற்றுச் சான்றுகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் கலை, பண்பாடு மற்றும் வரலாற்றை விளக்கும் இந்த அருங்காட்சியகம், மாவட்டத்தின் பண்பாட்டு வளா்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். சேலம் சாராதா கல்லூரி சாலையில் இயங்கி வந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ. 5 கோடியில் அஸ்தம்பட்டியில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அப்பகுதியில் 50.2 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு, 9,838.8 சதுர அடியில் புதிய அருங்காட்சியகக் கட்டடம் பொதுப்பணித் துறை மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்துடன் சேலம் அரசு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அா்ப்பணித்துள்ளாா் என்றாா்.

தொடா்ந்து, சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் புதிய அருங்காட்சியகத்தை பாா்வையிட்டாா். முன்னதாக, சேலம் மாவட்டத்தில் ரூ. 23.61 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்து, ரூ. 6.32 கோடி மதிப்பிலான புதிய வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு காணொலி வாயிலாக முதல்வா் அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், அருங்காட்சியா் முல்லை அரசு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தியாகராஜன், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி பொறியாளா் சிவக்குமாா், ஒப்பந்ததாரா் குண்டுமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.