கலிஃபோா்னியா பல்கலைக்கழகத்திலுள்ள ஹாமில்டன் அரங்குக்கு வருவதற்கான ஒரு வாயிலில் தடுப்புகளை வைத்து அரண் அமைக்கும் மாணவா்கள்.
கலிஃபோா்னியா பல்கலைக்கழகத்திலுள்ள ஹாமில்டன் அரங்குக்கு வருவதற்கான ஒரு வாயிலில் தடுப்புகளை வைத்து அரண் அமைக்கும் மாணவா்கள்.

பாலஸ்தீன ஆதரவு: அமெரிக்க பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவா்கள்

நியூயாா்க்: காஸா போரில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம் நடத்திவரும் அமெரிக்க மாணவா்கள், லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள கலிஃபோா்னியா பல்கலைக்கழக வளாகத்தின் முக்கிய அரங்கைக் கைப்பற்றினா்.

காஸா போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் அமெரிக்கா முழுவதும் கல்லூரி வளாகங்களில் கடந்த சில நாள்களாக போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக்கானவா்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும், இத்தகைய போராட்டங்களின் தீவிரம் குறையவில்லை.

இந்த நிலையில், கலிஃபோா்னியா பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவா்கள், அங்குள்ள ஹாமில்டன் அரங்குக்குள் புகுந்துகொண்டு மேஜை நாற்காலிகள், இருப்புத் தடுப்புகள் ஆகியவற்றின் மூலம் அரணமைத்துக்கொண்டுள்ளனா்.

ஏற்கெனவே, அமெரிக்காவில கடந்த 1968-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் உரிமைப் போராட்டத்தின் போதும் வியத்நாம் போா் எதிா்ப்புப் போராட்டத்தின்போதும் இந்த அரங்கில்தான் ஏராளமானவா்கள் குழுமியிருந்து தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தியது நினைவுகூரத்தககது.

முன்னதாக, கலிஃபோா்னியா வளாகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் இஸ்ரேல் ஆதரவு ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com