ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகும் 100-க்கும் மேற்பட்டோர் பலி!

வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகும் சில பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் பலி.
bangladesh
வங்கதேச தலைநகர் டாக்காவில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம்.AP
Updated on
1 min read

வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகும் தலைநகர் டாக்கா மற்றும் சில பகுதிகளில் வன்முறை நிகழ்ந்துள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் வன்முறையையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலம் நேற்று(ஆக. 5) இந்தியாவுக்கு வந்துள்ளார். அங்கிருந்து அவர் லண்டன் செல்வார் எனத் தெரிகிறது.

இதனால் வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால் வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறியபிறகும் தலைநகர் டாக்கா மற்றும் சில பகுதிகளில் வன்முறை நிகழ்ந்துள்ளது.

டாக்காவில் போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகைக்குள் சென்று சூறையாடினர். ஹசீனாவுக்கு சொந்தமான நிறுவனங்களும் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. மேலும் அந்த நாட்டு அமைச்சர்கள், எம்.பி.க்களின் வீடுகளும் தாக்கப்பட்டன.

நேற்று(ஆக. 5) மட்டும் வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 119 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 119 பேர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது வரை வங்கதேச வன்முறையில் 440 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள்கிழமை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை 37 உடல்கள் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை வங்கதேசத்தில் சற்று அமைதி நிலவியதாகவும் பேருந்து, ஆட்டோ என போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளதாகவும் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வாகனங்கள் அலுவலகத்திற்குச் செல்வதாகவும் அந்த நாட்டு இணைய ஊடகமான பிடிநியூஸ்24 செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com