
அரசுமுறைப் பயணமாக ஃபிஜி நாட்டிற்கு வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அந்த நாட்டு அதிபர் ரது வில்லியம்சை சந்தித்து பேசினார்.
ஃபிஜி நாட்டுக்கு வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அந்நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா வரவேற்றார். பின்னர் அங்கு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை அவர் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து சுவாவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற திரௌபதி முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை அதிபர் ரது வில்லியம் வரவேற்றார்.
இதையடுத்து, இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது இந்தியாவிற்கும் ஃபிஜிக்கும் இடையிலான வலுவான உறவு உள்ளதாக திரௌபதி முர்மு தெரிவித்தார்.
உலகின் தெற்கு பகுதியில் வாழும் மக்களின் நலன்களை முன்வைப்பதற்கான தளமாக ஃபிரி விளங்குவதாகக் கூறிய அவர், வெளிநாடுகளுடனான உறவை வலுப்படுத்தவே இந்தியா விரும்புகிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ஃபிஜியில் முர்மு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றவும், புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடவும் திட்டமிட்டுள்ளார்.
ஃபிஜி பயணத்தை நிறைவுசெய்த பின் நியூசிலாந்து மற்றும் டிமோா்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கு அவா் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மூன்று நாடுகளுக்கும் அவா் பயணம் மேற்கொள்வதன் மூலம் ‘ஆக்ட் ஈஸ்ட் கொள்கை’ மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசுத் தலைவா் ஒருவா் ஃபிஜி மற்றும் டிமோா்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.