மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியாக(ஜிஎஸ்டி) கடந்த 3 ஆண்டுகளில் ரூ.24,500 கோடி வசூலித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அவசர மருத்துவ செலவை சமாளிக்க மருத்துவ காப்பீட்டை பெரும்பாலான நடுத்தர குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் கட்டும் பிரீமியம் தொகைகளுக்கு மத்திய அரசு 18 சதவிகிதம் வரி வசூலிக்கின்றது.
இதேபோல், ஆயுள் காப்பீட்டுகளுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
கடந்த 2021 முதல் 24 வரையிலான காலகட்டத்தில் மருத்துவ காப்பீட்டுகளுக்கு ஜிஎஸ்டியாக ரூ. 21,255.55 கோடியும், மருத்துவ மறுகாப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியாக ரூ. 3,273.59 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2023 - 24 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மருத்துவ காப்பீட்டுகளுக்கு வரியாக ரூ.9,747.3 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டியை ரத்து செய்யக் கோரி மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சமீபத்தில் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் போராட்டம் - INC
இந்த பிரச்னையை கையிலெடுத்த திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடந்த வாரம் கேள்விகள் எழுப்பியிருந்தனர்.
மேலும், காப்பீட்டுகள் மீதான வரியை ரத்து செய்வது அல்லது குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில், காப்பீட்டுகள் மீதான வரிகளை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் செவ்வாய்க்கிழமை காலை போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதத்தின் வளா்ச்சிப் பயணம்!

இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 9.07% சரிவு

செவிலியா், துணை மருத்துவம் படித்த ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய சுகாதாரத் துறை செயலா்

தில்லியில் மழையுடன் கூடிய கடும் வெப்பம்: வழக்கத்திற்கு மாறான ஏப்ரல் வானிலை
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




