டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

பிஎல்ஐ திட்டங்கள்: 6 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.36,754 கோடி விடுவிப்பு

உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை (பிஎல்ஐ) திட்டங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.36,754 கோடி விடுவித்துள்ளது.

மத்திய அரசு

Published On :

உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை (பிஎல்ஐ) திட்டங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.36,754 கோடி விடுவித்துள்ளது.

இதுகுறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறையிடம் உள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

உள்நாட்டில் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசால் கடந்த 2020-ஆம் ஆண்டில் உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் ரூ.1.91 லட்சம் கோடி அளவுக்கு ஊக்கத்தொகை அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு ரூ.36,754 கோடி விடுவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டு நிதியாண்டில் மட்டும் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரையில் ரூ.1,400 கோடியை அரசு விடுவித்துள்ளது. 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.15,519 கோடி, 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.10,114 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

அதிகபட்சமாக ரூ.19,090 கோடி மின்னணு சாதன உற்பத்தித் துறைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தித் துறைக்கு ரூ.6,662 கோடி, உணவுப் பொருள் தயாரிப்பு துறைக்கு ரூ.3,271 கோடி, வாகன உதிரிபாக உற்பத்தித் துறைக்கு ரூ.3,174 கோடி மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தொலைத்தொடா்புத் துறைக்கு ரூ.2,796 கோடி, ஜவுளித் துறைக்கு ரூ.386 கோடி, ட்ரோன் தயாரிப்புத் துறைக்கு ரூ.93 கோடி, தகவல் தொழில்நுட்ப சாதன உற்பத்தித் துறைக்கு ரூ.98 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.