Priscilla Chan and her sculpture
தனது சிலையுடன் நிற்கும் மார்க் ஜூக்கர்பெர்க் மனைவி பிரிஸில்லா சான்Instagram / Mark Zuckerberg

மனைவிக்காக சிலை வைத்த மார்க் ஜூக்கர்பெர்க்!

சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
Published on

மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தனது மனைவிக்காக சிலை நிறுவியுள்ளார்.

உலகப் பணக்காரர்களில் ஒருவரும் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், 2012 இல் தனது நீண்டகால காதலியான பிரிஸில்லா சானைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு மாக்ஸிமா, ஆகஸ்ட், ஆரேலியா என்று 3 மகள்கள் உள்ளனர்.

மார்க் ஜூக்கர்பெர்க், தங்கள் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்தில், தனது மனைவி பிரிஸில்லாவுக்காக, அவரது சிலையை நிறுவியுள்ளார்.

இந்த சிலையுடன் பிரிஸில்லா இருக்கும் புகைப்படத்தையும், மார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சிலையை, நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர் டேனியல் அர்ஷம் என்பவரால் உருவாக்கியுள்ளார்.

மார்க்கின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வரும் நிலையில், பலரும் சமூக ஊடகங்களில் மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Priscilla Chan and her sculpture
அதானிக்கு சலுகை வழங்க மின்னல் வேகத்தில் செயல்படும் மோடி: காங்கிரஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com