பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியில் ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணை வீச்சு

ஹிஸ்புல்லா அமைப்பினா் 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி புதன்கிழமை சரமாரியாக தாக்குதல் நடத்தினா்.

News image

ஏவுகணை வீச்சால் ஏற்பட்ட சேதம்.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 12:00 am

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிரியாவின் கோலன் குன்றுகள் பகுதியில் லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினா் 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி புதன்கிழமை சரமாரியாக தாக்குதல் நடத்தினா்.

இதில், ஏராளமான வீடுகள் சேதமடைந்ததாகவும் சிலா் காயமடைந்ததாகவும் அந்தப் பகுதி அதிகாரிகள் கூறினா். ஏவுகணை வீச்சில் தீப்பற்றிய ஒரு வீட்டில் ஏற்படவிருந்த எரிவாயு கசிவை தாங்கள் தக்க நேரத்தில் தடுத்து நிறுத்தியதால் மிகப் பெரிய உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டதாக மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.

லெபனானுக்குள் இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த ஏவுகணை வீச்சு நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது. அந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 19 போ் காயமடைந்தனா்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி முதல் போா் நடைபெற்றுவருகிறது. இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் மற்றோா் ஆயுதக் குழுவினரான ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் நிலைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனா். இதனால், இது தரப்பினருக்கும் இடையே மோதல் தொடா்ந்துவருகிறது.