உக்ரைன் தாக்குதலில் 5 பேர் பலி: 3 பத்திரிகையாளர்கள் காயம்

பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்று வந்த மறுநாளே உக்ரைன் எல்லையிலிருந்து குண்டு வீசித் தாக்குதல்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கீவ்: ரஷிய எல்லைப் பகுதியில், உக்ரைன் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

விடுதியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பத்திரிகையாளர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கினார். 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\

பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்று வந்த மறுநாளே உக்ரைன் எல்லையிலிருந்து குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷியாவின் எல்லைப் பகுதியான டோனெட்ஸ்க் மாகாணத்திற்குட்பட்ட கிராமாட்ரோஸ்க் நகரில் உள்ள விடுதியில் ரஷியப் படையினர் தங்கியிருந்தனர். உக்ரைன் எல்லையிலிருந்து இந்தப் பகுதியின் மீது உக்ரைன் படையினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் பலியானதாக மண்டல கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் விடுதியில் தங்கியிருந்தவர்களில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஒருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் மூன்று பேரும் பத்திரிகையாளர்கள். ஒருவர் உக்ரைன் பத்திரிகையாளர். மற்ற இருவரும் அமெரிக்கா, லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் எனத் தெரிவித்தார்.

கோப்புப் படம்
சொல்லப் போனால்... நள்ளிரவில் நடுவீதியில் நகைகள் அணிந்து நடக்கும் பெண்!

உக்ரைன் போர் குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்ற எங்கள் இரு பத்திரிகையாளர்கள் மாயமாகியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் இன்று தெரிவித்திருந்தது. ஆறு பேர் கொண்ட குழுவினர் சென்றிருந்ததாகவும், சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்கள் சிக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தது. மீதமுள்ளவர்கள் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.