பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்...

News image

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி... - AP

Updated On :7 மார்ச் 2026, 4:20 pm IST

உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ரஷியா நடத்திய தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் 2 ஆவது மிகப் பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட பகுதிகள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நள்ளிரவு ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில், அங்குள்ள ஏராளமான குடியிருப்புக் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 29 ஏவுகணைகள் மற்றும் 480 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் உள்பட ஏராளமனோர் படுகாயமடைந்துள்ளதாகவும், உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷியா உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அபுதாபியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களால் அபுதாபி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தைகளை சுவிட்சர்லாந்து அல்லது துருக்கியில் நடத்தலாம் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Nine people have reportedly been killed in Russian attacks on various major cities in Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.