பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஈரான் போர்! குவைத் மீதான தாக்குதலில் 61 வீரர்கள் படுகாயம்!

ஈரானின் தாக்குதல்களில் 61 குவைத் ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளது குறித்து...

61 Kuwaiti soldiers have been seriously injured in Iran's attacks.

மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்களில் கொல்லப்பட்ட 13 பேரில் 8 பேர் குவைத் நாட்டைச் சேர்ந்தவர்கள்... - AP

Published On :

எஈரானின் தாக்குதல்களில், குவைத் நாட்டின் ராணுவ வீரர்கள் 61 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதில், மத்திய கிழக்கில் உள்ள குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சௌதி அரேபியா போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களால் இதுவரை 67 குவைத் ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) அறிவித்துள்ளது.

மேலும், கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரினால் வளைகுடா நாடுகளின் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ள நிலையில்; அதில் அதிகப்படியாக குவைத் நாட்டில் 8 பேர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

முன்னதாக, குவைத் நாட்டில் ஏராளமான அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளதால், அந்நாட்டின் மீது கடந்த பிப். 28 முதல் 212 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 394 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

61 Kuwaiti soldiers have been seriously injured in Iran's attacks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.