ஈரான் மீதான இஸ்ரேலின் திடீர் தாக்குதல்களைத் தொடர்ந்து இருநாடுகளும் தங்களது வான்வழிப் பாதைகளை மூடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மீது சனிக்கிழமை (பிப். 27) இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் வீடு, அலுவலகம் ஆகியவைக் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு, ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இஸ்ரேல் முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அபாயஒலிகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஈரானின் வான்வழிப் பாதைகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானில் செல்போன் சேவைகள் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்துடன், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் எனக் கருதப்படுவதால், அந்நாட்டின் பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையில் 12 நாள் போர் நடைபெற்றது. இதையடுத்து, இஸ்ரேலின் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that both countries have closed their airspace following Israel's surprise attacks on Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கிய ஈரானின் கடற்படைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,001 பேர் பலி! 118 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


