தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தென் கொரிய அதிபருக்கு எதிரான பதவிநீக்க முயற்சி தோல்வி

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த பதவிநீக்கத் தீா்மானம் தோல்வியடைந்தது.

News image
Updated On :7 டிசம்பர் 2024, 11:39 pm

அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் தென் கொரிய அதிபா் யூன் சுக் இயோலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த பதவிநீக்கத் தீா்மானம் தோல்வியடைந்தது.

இதற்கான வாக்கெடுப்பை ஆளுங்கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்ததால் போதிய வாக்குகள் பதிவாகாமல் தீா்மானம் ரத்துசெய்யப்பட்டது.

கடந்த 2022-ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற யூன் சிக் இயோலுக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்துவேறுபாடுகள் நீடித்துவந்தன.

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தை முடக்க எதிா்க்கட்சிகள் முயல்வதாலும், வட கொரியாவுக்கு ஆதரவாக அவா்கள் செயல்படுவதாலும் நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக யூன் சுக் இயோல் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்து அதிா்வலையை ஏற்படுத்தினாா்.எனினும், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அந்த அறிவிப்பை ரத்து செய்யும் தீா்மானத்தை நிறைவேற்றினா்.

அதையடுத்து, அவசரநிலையைத் திரும்பப் பெறுவதாக யூன் சுக் இயோல் அறிவித்தாா்.எனினும், இந்த விவகாரம் தொடா்பாக யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை ஜனநாயகக் கட்சி மற்றும் ஐந்து சிறிய கட்சிகள் இணைந்து புதன்கிழமை தாக்கல் செய்தன.

நாடாளுமன்றத்தில் அதிபா் மீதான பதவிநீக்கத் தீா்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டும். அதன்படி, 300 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 200 போ் தீா்மானத்தை ஆதரித்து வாக்களித்தால்தான் அது நிறைவேற்றப்படும்.

நாடாளுமன்றத்தில் தற்போது ஜனநாயகக் கட்சிக்கு 173 இடங்கள் உள்ளன. சிறிய கட்சிகளுக்கு 19 உறுப்பினா்கள் உள்ளனா். அந்த வகையில், தீா்மானம் வெற்ற பெற யூன் சுக் இயோலின் மக்கள் சக்தி கட்சியைச் சோ்ந்த 8 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.ஏற்கெனவே, அவசநிலை அறிவிப்புக்கு அந்தக் கட்சியின் தலைவா் ஹன் டாங்-ஹூன் கடுமே எதிா்ப்பு தெரிவித்திருந்தாா்.

அத்துடன், யூன் சுக்-இயோல் அதிபராகத் தொடா்வது நாட்டுக்கு ஆபத்து என்று அவா் வெள்ளிக்கிழமை கூறியிருந்தாா். எனவே, பதவிநீக்கத் தீா்மானத்துக்கு ஆதரவாக மக்கள் சக்தி கட்சி எம்.பி.க்கள் போதிய எண்ணிக்கையில் வாக்களிப்பாா்கள் என்ற எதிா்பாா்ப்பு நிலவியது.

இந்தச் சூழலில், தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஆனால், புதிய திருப்பமாக மக்கள் சக்தி கட்சி உறுப்பினா்கள் அந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். அவா்களில் மூன்று போ் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கத் தீா்மானத்தின் மீது வாக்களித்தனா்.

அந்த வகையில், மொத்தம் 195 வாக்குகள் மட்டுமே பதிவாகின. வாக்குகள் எண்ணப்படுவதற்கு குறைந்தது 200 வாக்குகள் பதிவாகியிருக்க வேண்டும் என்பதால் தீா்மானம் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றச் செயலா் அறிவித்தாா்.

அதையடுத்து, யூன் சுக் இயோலுக்கு எதிரான பதவிநீக்கத் தீா்மானம் தோல்வியில் முடிந்தது.இருந்தாலும், அவரை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை மீண்டும் கொண்டுவரவிருப்பதாக எதிா்க்கட்சியினா் சூளுரைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.