தீபாவளி விடுமுறை எதிரொலி: நாளை சென்னை மெட்ரோவில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை!தீபாவளி விடுமுறை: நாளை (நவ. 9) ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!உலகில் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை! பட்டாசு கழிவுகளை அகற்ற சென்னையில் 600 தூய்மைப் பணியாளர்கள்!மேக்கேதாட்டு அணை: யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை: விஜய்க்கு கர்நாடக முதல்வர் பதில்!

பிரேஸில் அதிபருக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை

லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

AP

Updated On :

பிரேஸில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளையில் ரத்த உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகியிருந்த நிலையில், அவருக்கு சா பாலோ நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

79 வயதான டா சில்வா கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தலைநகர் பிரேஸிலியாவில் உள்ள அதிபர் மாளிகையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் உண்டானது. வெட்டுக்காயம் காரணமாக அவருக்கு தலையில் தையல் போடப்பட்டது. இதனையடுத்து அந்த மாதம் ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், திங்கள்கிழமை தலைவலி அதிகரித்ததன் காரணமாக அவர் பிரேஸிலியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்த உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவருக்கு சிரியன்-லெபானீஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை(டிச.9) இரவு மூளையில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பிரேஸில் அதிபர் சிகிச்சை பெற்று வரும் சிரியன்-லெபானீஸ் மருத்துவமனை தரப்பில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூளையில் ரத்த உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகியதே அவர் திடீரென மயக்கமடைவதற்கான காரணமெனவும், தற்போது லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.