இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

பிரேஸில் அதிபர் தேர்தலில் தோல்வி! டிரம்ப் ஆதரவு வேட்பாளர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!

பிரேஸில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த வலதுசாரி வேட்பாளர் அந்நாட்டில் இருந்து தப்பியோடியது குறித்து...

Flavio Bolsonaro

பிரேஸில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த வலதுசாரி வேட்பாளர் ஃபிளாவியோ போல்சோனாரோ - AP

Updated On :

பிரேஸில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த வலதுசாரி வேட்பாளர் ஃபிளாவியோ போல்சோனாரோ, ஈக்வடார் நாட்டுக்குத் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேஸில் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 25) நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில், 80 வயதான தற்போதைய இடதுசாரி அதிபர் லூலா டாசில்வா 51.21 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவைப் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி வேட்பாளர் ஃபிளாவியோ போல்சோனாரோ 48.79% வாக்குகளைப் பெற்றுத் தோல்வியைத் தழுவினார்.

பிரேஸில் தேர்தலில் தோல்வியடைந்தவுடன் ஃபிளாவியோ போல்சோனாரோ அந்நாட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை (அக். 27) இரவு ஆர்ஜென்டீனா நாட்டுக்குத் தப்பிச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஆர்ஜென்டீனாவில் இருந்து போல்சோனாரோ, அவரது மனைவி மற்றும் இரு மகள்கள் ஆகியோர் தனியார் விமானம் மூலம் ஈக்வடார் நாட்டின் குவாயாகில் நகரத்துக்குச் சென்றடைந்ததாக, ஆர்ஜென்டீனா அரசு புதன்கிழமை காலை அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, பணமோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் போல்சோனாரோவுக்கு எதிராக பிரேஸிலில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதித்த பிரேஸில் உச்சநீதிமன்றம் அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், போல்சோனாரோ சட்டப்பூர்வமான ஆவணங்களைக் கொண்டே தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததாகவும், அவர் எந்தவொரு சட்டத் தடைகளும் இன்றி ஈக்வடாருக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் ஆர்ஜெண்டீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, தேர்தலில் தோல்வியடைந்த போல்சோனாரோ மற்றும் அவரது குடும்பத்துக்கு விசாக்களை வழங்கப்போவதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Flávio Bolsonaro, the right-wing candidate who was defeated in the Brazilian presidential election, has fled to Ecuador.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.