பிரேசில் தேர்தலை இந்திய தேர்தலுடன் குழப்பிய டிரம்ப்!

பிரேசில் தேர்தலை இந்திய தேர்தலுடன் டிரம்ப் குழப்பியது பற்றி...

Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Published On :

பிரேசில் அதிபர் தேர்தலை இந்தியத் தேர்தலுடன் குழப்படி செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் அதிபா் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக். 4) நடைபெற்றது. இந்த தேர்தலில் 12.5 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பிரேசில் அதிபர் லூலா டாசில்வா 45% வாக்குகளும், ஃபிளாவியோ போல்சனாரோ 47% வாக்குகளும் பெற்று முன்னிலை வகித்தனர்.

எந்த வேட்பாளரும் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளா்களுக்கு இடையே அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், பிரேசில் தேர்தலை பற்றி ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரேசிலுக்கு பதிலாக இந்தியா எனக் குறிப்பிட்டது பேசுபொருளானது.

அந்த பதிவில் டிரம்ப் தெரிவித்திருப்பதாவது:

"இந்திய குடியரசுத் தேர்தலின் முதல் சுற்றில் 12.5 கோடி மக்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன், அதே நாளில் முடிவுகள் வெளியாகிவிட்டன.

ஆனால் டெட்ராய்ட், பிலடெல்பியா, கலிபோர்னியா மற்றும் அமெரிக்காவின் பல நகரங்கள் மற்றும் மாகாணங்களில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைக் கணக்கிடவே பல வாரங்கள் ஆகின்றன. அமெரிக்காவில் வாக்குப்பதிவு முறை ஊழல் நிறைந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.

நீக்கப்பட்ட பதிவு

நீக்கப்பட்ட பதிவு

இந்த பதிவில், பிரேசிலுக்கு பதில் இந்தியா எனக் குறிப்பிட்டது வைரலான நிலையில், அந்த பதிவு நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட பதிவு மீண்டும் வெளியிடப்பட்டது.

திருத்தப்பட்ட பதிவு

திருத்தப்பட்ட பதிவு

Summary

Trump confused the Brazilian election with the Indian election!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.