இஸ்ரேல் தேர்தல்! நெதன்யாகு கூட்டணி முன்னிலை! ஆனால்... பெரும்பான்மை பெறுவார்களா?
இஸ்ரேல் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி முன்னிலை எனத் தகவல்...

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - AP
இஸ்ரேலின் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று (அக். 28) நடைபெற்று வரும் நிலையில், பதிவான வாக்குகளில் 50.1 சதவிகித வாக்குகள் தற்போதுவரை எண்ணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில், பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சியின் தலைமையிலான கூட்டணி 56 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக, அந்நாட்டின் மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, எதிர்க்கட்சிகள் 49 இடங்களிலும், அரபு கட்சிகள் 15 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 27) இரவு வாக்குப் பதிவுகளுக்குப் பின்பு வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் நெதன்யாகு மற்றும் அவரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி காடி ஐசென்கோட் ஆகிய இருவரின் கூட்டணிகளும் பெரும்பான்மையான இடங்களைப் பெற மாட்டார்கள் எனக் கூறப்பட்டது.
இஸ்ரேலிய அரசியலைப்பின்படி ஆட்சி அமைக்க 61 இடங்களைப் பெறுவது கட்டாயமாகும். இதுவரை எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையைப் பெற்று தனித்து ஆட்சியமைத்தது இல்லை எனக் கூறப்படும் நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்து வந்துள்ளன.
ஏற்கெனவே, காஸா மற்றும் ஈரான் மீதான நெதன்யாகு தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேலியர்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
In the vote count for Israel's general election, the coalition led by Prime Minister Benjamin Netanyahu is reported to be in the lead.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

