இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஃப்ளை துபை விமான சம்பவம்: நெதன்யாகு கடும் எச்சரிக்கை!

ஃப்ளை துபை விமான சம்பவத்திற்குப் பின் உள்ளது யாராக இருந்தாலும் அதற்கான கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Israeli Prime Minister Netanyahu

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - கோப்புப் படம்

Published On :

ஃப்ளை துபை விமான சம்பவத்திற்குப் பின் உள்ளது யாராக இருந்தாலும் அதற்கான கடுமையான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட விமானத்தில் சக விமானியால் கத்திக்குத்து காயமடைந்த போதிலும் துணிவுடன் போராடி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார் இந்திய விமானி ஸ்மித் மச்சார்.

விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்க முயன்ற அந்த விமானியைப் பயணிகள் மடக்கிப் பிடித்ததால், சவூதி அரேபியாவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ்' விமானத்தில் அரங்கேறிய இச்சம்பவம் உலகம் முழுவதையும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “காலம் செல்லச் செல்ல நிலைமை தெளிவாகத் தெரிகின்றது. தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதச் சிந்தனைகளைக் கொண்டவர். பயணிகளுடன் சேர்த்து விமானத்தை விபத்துக்குள்ளாக்குவதே அவரது நோக்கம்.

அவர் யாரால் அனுப்பப்பட்டார் என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம். அவரை அனுப்பியது யாராக இருந்தாலும் அதற்கான கடுமையான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நாட்டையும் குறிப்பிட்டு இந்தக் கருத்தை அவர் தெரிவிக்கவில்லை என்றாலும், ஈரானை எச்சரிக்கும் விதமாகவே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், நெதன்யாகு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Summary

Israeli Prime Minister Netanyahu has stated that whoever is behind the Flydubai flight incident will have to pay a heavy price.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.