அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

ஐநா கூட்டத்தொடர்: நேற்று ஈரான் அதிபர், இன்று இஸ்ரேல் பிரதமர்! நியூயார்க் சென்றார் நெதன்யாகு!

ஐ.நா. அவையில் உரையாற்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்துக்குச் சென்றுள்ளது குறித்து...

Netanyahu arrives in New York

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - ஏபி

Published On :

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக்கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்துக்குச் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொது அவையின் 81 ஆவது கூட்டத்தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், ஏராளமான உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று (செப். 24) நியூயார்க் நகரத்துக்குச் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்றிரவு 11.30 மணியளவில் அவர் உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய பிரதமரின் இந்தப் பயணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திப்பதற்கான எந்தவொரு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, நேற்று நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தொடரில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் பங்கேற்று தங்கள் நாட்டின் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து உரையாற்றினார்.

முன்னதாக, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு நியூயார்க் வந்தால், காஸாவில் அரங்கேறிய இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடிஉத்தரவின் அடிப்படையில் அவரைக் கைது செய்வேன் என நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Israeli PM Netanyahu has arrived in New York City to participate in the UNGA session.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.