
மெக்கா நகரத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்! சௌதியின் எச்சரிக்கையால் பரபரப்பு!
மெக்கா நகரத்துக்கு சௌதி அரேபியாவின் பொது பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்தது குறித்து...

மெக்கா... - கோப்புப் படம்
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு சௌதி அரேபியாவின் பொது பாதுகாப்புத் துறை ஆபாய எச்சரிக்கைகளை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரம் உள்பட செங்கடல் மாகாணமான யான்பூ, தயீஃப், ஜெட்டா மற்றும் தபுக் ஆகிய பகுதிகளுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் பொது பாதுகாப்புத் துறை இன்று (செப். 24) எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதில், வழக்கமாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு மட்டுமே விடுக்கப்படும் இந்த எச்சரிக்கைகளால் அந்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், சில நிமிடங்களில் அந்த எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.
யேமனில் ஹௌதி கிளர்ச்சிப்படைகளுக்கும், சௌதி அரசின் ஆதரவைப் பெற்ற அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல்கள் நடைபெற்று வருவதால், சௌதி அரேபியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே, கடந்த வாரம் மெக்கா நகரத்தின் மீது ஹௌதிகள் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அதைத் தங்களின் படைகள் இடைமறித்து முறியடித்ததாகவும் சௌதி அரசு அறிவித்தது.
இந்தச் சம்பவத்துக்கு, இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், புனித நகரங்களின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் எனவும்; இது சௌதியின் பொய்ப் பிரசாரம் எனவும் ஹௌதிகள் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that Saudi Arabia's Civil Defence issued safety warnings for Mecca, the holy city of Muslims.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







