
மத்திய கிழக்கில் 20,000 அமெரிக்க வீரர்கள் குவிப்பு: மீண்டும் தீவிரமடையும் போர்!
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலைநிறுத்த தனது 3-வது விமானம் தாங்கி போர்க் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
டொனால்ட் டிரம்ப். - படம் - ஏபி
அமெரிக்காவில் நவம்பர் 3 அன்று நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலைநிறுத்த தனது 3-வது விமானம் தாங்கி போர்க் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது. அதேநேரம், கூடுதலாக கிட்டத்தட்ட 10,000 ராணுவ வீரர்களையும் அங்கு நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, 'யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்' மற்றும் 'யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன்' என இரு விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் 3-வது போர்க்கப்பலான 'யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்' இம்மாத இறுதிக்குள் மத்திய கிழக்கிற்குச் சென்று சேரும் எனக் கூறப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலில் செயல்பட்டு வந்த 'யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன்' கப்பல், 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' கப்பலுக்குப் பதிலாக பணியாற்ற மத்தியக் கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, 10,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் மத்திய கிழக்கில் முகாமிட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 20,000 ஆக வழக்கத்திற்கு மாறாக உயர்ந்துள்ளது. இதனால், ஈரான் மீது அமெரிக்கா மிக மோசமான தாக்குதல்களை நடத்த வாய்ப்பிருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.
போர்நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவை சமீபத்தில் டிரம்ப் நிராகரித்தார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், அதனை நிராகரித்த டிரம்ப், ”அவர்கள் மோசமாகத் தோல்வியடைந்து வருவதால், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
Summary
20,000 US troops amassed in the Middle East: War intensifies again
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





