காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

போர் பாதிப்பு! சௌதிக்கு ரூ. 47,245 கோடிக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்கா!

சௌதி அரேபியாவுக்கு ரூ. 47,245 கோடிக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா ஒப்புதல்...

US approves $5 billion sale of bombs to Saudi Arabia

சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் - அமெரிக்க அதிபர் டிரம்ப் - ANI

Published On :5 செப்டம்பர் 2026, 12:51 pm IST

சௌதி அரேபியாவுக்கு ரூ. 47,245 கோடி மதிப்பிலான வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் போரில், பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாகக் கருதப்படும் சௌதி அரேபியா தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், சௌதி அரேபியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்து நடவடிக்கையாக ரூ. 47,245 கோடி (5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவிலான வெடிகுண்டுகள், வழிகாட்டும் உபகரணங்கள் ஆகியவற்றை விற்பனைச் செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக, வெள்ளிக்கிழமை (செப். 5) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், நேட்டோ படையைச் சேராத ஒரு நட்பு நாட்டின் வான் பாதுகாப்பு திறன் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஈரான் உடனான அமெரிக்காவின் போர் தொடங்கியது முதல், சௌதி அரேபியாவின் பல்வேறு முக்கிய நகரங்களை ஈரானிய படைகள் தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் தாக்கி வருகின்றன.

இத்துடன், ஈரானுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ள யேமனின் ஹௌதி படைகளும் செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

the US government has approved the sale of weapons, including bombs, worth ₹47,245 crore to Saudi Arabia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.