தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஈரான்-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் இல்லை; உதவினால் கடும் நடவடிக்கை! - அமெரிக்க அரசு!

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசு எச்சரிக்கை...

U.S. Secretary of State Marco Rubio

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ - AP

Published On :

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்திருந்த ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனை கடந்த புதன்கிழமை (செப். 2) சந்தித்து உரையாடினார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் 6 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், அதிபர் பெஷேஷ்கியன் மற்றும் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி - அதிபர் பெஷேஷ்கியன் சந்திப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இருதரப்புக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக நினைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறி ஈரான் வருவாய் ஈட்ட உதவும் நாடுகள் மீதும் அமெரிக்க அரசு தடை விதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தொடங்கியது முதல், இருநாடுகள் உடனும் உறவுகளைக் கடைபிடிப்பது இந்தியா போன்ற நடுநிலையான நாடுகளுக்கு சவாலான ஒன்றாகியுள்ளது.

மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக தொடங்கிய இந்தப் போரில், தற்போது ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்ற அமெரிக்கா மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

US Secretary of State Marco Rubio has stated that the US will take strict measures against countries that assist Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.