ஈரான் மீதான போரில், கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதுதான் முதல் இலக்கு என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக, கடந்த பிப். 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரானின் முக்கிய நகரங்களின் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே போர் வெடித்த நிலையில், கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ததால், மீண்டும் போர் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.
இந்தப் போரின் முக்கிய இலக்கு ஈரான் அணுசக்தித் திட்டத்தை கைவிடுவது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், ஈரான் மீதான போரின் முதல் இலக்கு கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதுதான் எனவும், இரண்டாவது இலக்கு ஈரான் அணு ஆயுதங்கள் பெறாததை உறுதி செய்து எனவும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நேற்று (ஆக. 13) கூறியுள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“போர் தொடங்கிய ஆரம்ப நாள்களில் இருந்த உச்ச விலையை விடவும் இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது என்பதை நான் அறிவேன்.
நாடு முழுவதுமுள்ள அமெரிக்கர்களுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதே எங்களின் முதன்மையான இலக்காகும்.
மேலும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெறாததை உறுதி செய்வது எங்களின் இரண்டாவது இலக்காகும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க தாக்குதல்களுக்கு எதிரான சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியுள்ளன.
இதனால், எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உருவாகி அதன் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, இந்தப் போரில் ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றுவதற்கு அமெரிக்க அரசு மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
US VP J.D. Vance has stated that the primary goal in a war against Iran is to lower crude oil prices.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும்: டிரம்ப்

தாக்குதல் நடத்தவேண்டாம் என அமெரிக்காவிடம் கேட்கவில்லை: டிரம்ப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு!
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல்! கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்குமா?
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju




