நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல்! கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்குமா?

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது தொடர்பாக...

News image

கச்சா எண்ணெய் - பிரதிப்படம்

Updated On :9 ஜூலை 2026, 1:29 pm IST

மத்திய கிழக்கில் பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நகரங்களில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்குகள் ஈரானில் நடைபெற்று வந்தன.

இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.

ஆகையால், கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாகவும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடர்வதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நகரங்களில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும், கடந்த இரண்டு நாள்களில் மட்டும் அமெரிக்காவின் தாக்குதல்களால் 14 பேர் கொல்லப்பட்டதோடு, 78 பேர் காயமடைந்துள்ளனர். புஷேர், ஷபஹார், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட ஹோர்முஸ் நீரிணையை ஒட்டியுள்ள ஈரானிய நகரங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே தொடரப்பட்ட இந்த தாக்குதல்களால் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை சுமார் 12% வரை அதிரடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran has launched retaliatory attacks on US facilities in Middle Eastern locations such as Bahrain, Kuwait, and Qatar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.