முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொன்றால் ரூ. 30 லட்சம் வெகுமதி: ஈரான் அறிவிப்பு!

அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றோ, உயிருடனோ பிடிப்பவர்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 30 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 12:50 pm IST

அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றோ, உயிருடனோ பிடிப்பவர்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 30 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவ வீரர்களைப் பிடித்து தருவதாக பல்வேறு கோரிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் வகுக்கப்பட்டதாக ஈரான் ராணுவத் தளபதி அமீர் ஹடாமி தெரிவித்தார்.

அமெரிக்க வீரர்கள் எங்கு, எப்போது கொல்லப்படுவார்கள் அல்லது சிறைபிடிக்கப்படுவார்கள் என்பது பற்றி ஹடாமி எந்த விவரங்களையும் அளிக்கவில்லை.

அவர் பேசுகையில், “அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொன்றோ அல்லது உயிருடனோ பிடித்து ஒப்படைப்பவர்களுக்கு ஈரான் அரசு சார்பில் 30,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 28.7 லட்சம்) வெகுமதியாக வழங்கப்படும். இந்தச் செயலில் ஈடுபடும் துணிச்சல்மிக்க ஈரானிய பெண்களுக்கு இரட்டிப்பு வெகுமதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், ”பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா அல்லது ஹோர்முஸ் நீரிணை பகுதிகளுக்குள் நுழைய அமெரிக்காவுக்கு இனி அனுமதி இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா ஈரான் இடையே போர் தொடங்கப்பட்ட நிலையில், ஒரு மாதம் கழித்து ஈரானில் விழுந்த ஒரு F-15 ரக விமானத்தின் ஆயுதப் பிரிவு அதிகாரியை மீட்க அமெரிக்கா ஒரு மாபெரும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது.

அதில், ஈரானின் படைகளுக்கு முன்பே அந்த விமானியைக் கண்டுபிடிக்க, சுமார் 200 அமெரிக்கப் படையினரும் 170-க்கும் மேற்பட்ட விமானங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன. அந்த நடவடிக்கையின்போது, ஈரானியப் படைகள் ஒரு ஏ-10 விமானத்தைச் சேதப்படுத்தியது.

சில நாட்களிலேயே, எஃப்-15 விமானத்தின் விமானி ஒரு மீட்பு நடவடிக்கையில் அமெரிக்க ஹெலிகாப்டர் குழுவினரால் மீட்கப்பட்டார்.

பின்னர்,தற்காலிக போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜூன் மாதத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

அதன் பின்னர் ஈரானும் அமெரிக்காவும் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டுமென்றால் தங்களது கோரிக்கைகளை அமெரிக்கா நிபந்தனைகளின்றி நிறைவேற்றவேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க இராணுவ வீரர்கள் 17 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

Summary

Rs. 30 lakh reward for killing US soldiers: Iran announces!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.