ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!

ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார் என ஈரான் தெரிவித்திருப்பது பற்றி...

...

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் - கோப்புப்படம்

Published On :

அமெரிக்கா தனது ராணுவ முற்றுகையை நீக்கினால், 7 நாள்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையே கிட்டத்திட்ட 7 மாதங்களாகப் போர் நீடித்து வரும் நிலையில், ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது. ஈரானும் தடையை மீறி ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய்க் கப்பல்களை தாக்கி வருகின்றது.

இதனால், சர்வதேச அளவில் கடும் பொருளாதார நெருக்கடி அதிகரித்திருக்கும் சூழலில், ஹோர்மூஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை கடுமையாக்க போவதாக டிரம்ப் அண்மையில் மிரட்டல் விடுத்திருந்தார்.

மேலும், நாளை (செப். 23) முதல் ஈரானின் விமானப் போக்குவரத்து சேவையை முடக்கப் போவதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத ஈரான் அரசு உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் மற்றும் ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், அமெரிக்கா தனது ராணுவ முற்றுகையை நீக்கினால், 7 நாள்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க தயாராக இருப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விரைவில் அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Ready to open Hormuz if the military blockade is lifted! Iran sets condition for the US!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER