FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது பற்றி...

News image

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்த டொனால்ட் டிரம்ப். - படம் - எக்ஸ்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 7:02 pm IST

ஹோர்முஸ் நீரிணையை அமெரிகாவின் ஒரு பகுதியாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், அமைதி ஒப்பந்தம் இறுதியானதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்கா அந்நாட்டின் மீது தாக்குதலைத் தொடர்ந்தது. இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்தப் போரில், ஈரானின் முக்கிய கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதனால் இருபுறமும் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்தன.

ஆகையால், உலகளவில் எண்ணெய் வழிப்போக்குவரத்தில் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுவதுமாக மூடியது. இதையடுத்து, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பல்வேறு நாட்டின் தலைவர்கள் தங்களது மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இருபுறமும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்து ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதேவேளையில், ஹோர்முஸ் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பாக ஓமனுடனும் ஈரான் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இதனிடையே, போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதிலும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், வளைகுடா நாட்டின் வரைபடத்தில் ஹோர்முஸ் நீரிணையை வட்டமிட்டு, இது அமெரிக்காவின் ஒரு பகுதி என டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுருக்கிறது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக, “எங்களுடைய கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்கும் வரை, ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடியே இருக்கும்” என ஈரான் தரப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

President Donald Trump has declared the Strait of Hormuz to be part of the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.