தங்கள் நாட்டு விமானிகள் 3 பேரை கத்தாா் நாடு பிடித்து வைத்திருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அந்நாட்டின் ராணுவ தளம் மீது ஈரானிய போா் விமானங்கள் கடந்த மாா்ச் மாதம் தாக்குதல் நடத்த சென்றன. அப்போது ஈரானிய ஜெட் விமானங்கள், கத்தாரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. அப்போது அந்த விமானங்களில் இருந்த 3 விமானிகள் குறித்த தகவல் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், 3 விமானிகளையும் கத்தாா் பாதுகாப்புப் படையினா் பிடித்து வைத்திருப்பதாக ஈரானிய பாதுகாப்புப் படைகளில் காணாமல் போனோருக்கான குழு அதிகாரி தெரிவித்துள்ளது. அத்துடன் ஈரானிய அதிகாரிகளை கத்தாரில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டுமெனவும் ஈரான் கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால் ஈரானிய விமானிகள் யாரையும் தாங்கள் பிடித்து வைத்திருக்கவில்லை என கத்தாா் மறுத்துள்ளது. போா் விமானங்களுடன் அதில் இருந்த விமானிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ள கத்தாா் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா், விமானிகளின் உடல் பாகங்கள் மட்டுமே தங்களது குழுவால் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
பிப்ரவரி மாதம் முதல் போா் நடைபெறும் நிலையில், தங்கள் நாட்டு வீரா்களை அண்டை நாடு ஒன்று பிடித்து வைத்திருப்பதாக ஈரான் தெரிவித்திருப்பது இதுவே முதல்முறையாகும். ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தான், கத்தாா் மத்தியஸ்த பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. ஈரானின் நட்பு நாடுகளில் கத்தாரும் ஒன்றாக கருதப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைதிப்பேச்சு! ஈரானிய தலைவர்களுடன் பாக். அமைச்சர் சந்திப்பு!

அமெரிக்க தளங்களைத் தாக்கிய ஈரான்! பலத்த அடியைச் சந்திக்கப் போகிறார்கள்! - டிரம்ப் மிரட்டல்!

ரஷியா, சீனாவுடன் ஆலோசனை; ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!





