மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!

அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து...

iran attack

ஈரான் நடத்திய தாக்குதல்... - AP|கோப்புப்படம்

Published On :

அமெரிக்க தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பலைத் தாக்க முயன்றதாகக் குற்றஞ்சாட்டி ஈரானின் பல்வேறு நகரங்களின் மீது அமெரிக்க ராணுவம் கடந்த புதன்கிழமை (செப். 2) அதிகாலை தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில், ஈரானின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் உள்பட சுமார் 19 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஹோர்மோசான் மாகாணத்தின் சிரிக் நகரத்தில் திருமணம் நடைபெற்ற வீட்டின் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கும் வளைகுடா நாடுகளின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்போன் வாயிலாக உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையாடலில், வளைகுடாவில் நிலவும் பதற்றமான சூழல் குறித்தும், இருநாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, போர் தொடங்கிய முதல் 6 வாரங்களில் மட்டும் அமெரிக்காவின் சொத்து எனக் குறிப்பிட்டு அமீரகத்தின் மீது 530 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 2,200 ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Summary

In retaliation for US attacks, Iran carrying out strikes targeting key infrastructure in Gulf countries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.