மதுராந்தகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் முதல்வர் விஜய் பிரசாரம் தொடக்கம்!வண்டலூர் பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! தாம்பரம் காவல்துறை விளக்கம்தவெக ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு! மேயர் பிரியா உரைஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

ஐ.நா.வில் நெதன்யாகு உரை! 77 நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு!

ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேலிய பிரதமர் உரையைத் தொடங்கியவுடன் 77 வெளிநாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு...

Diplomats walk out as Netanyahu takes podium

ஐநா அவையில் இஸ்ரேல் பிரதமர் உரையாற்ற தொடங்கியவுடன் உலக நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு... - ஏபி

Published On :

ஐக்கிய நாடுகள் பொது அவையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையைத் தொடங்கியதும் சுமார் 77 நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் பொது அவையின் 81 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் உரையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு வியாழக்கிழமை (செப். 24) அன்று ஐ.நா. அவையில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, நெதன்யாகு தனது உரையைத் தொடங்கியதும் தென்னாப்பிரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட 71 வெளிநாடுகளின் பிரதிநிதிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, பிரதிநிதிகள் பலரும் வெளிநடப்பு செய்ததால் இஸ்ரேல் பிரதமரின் உரையில் அவையில் இருந்த பெரும்பாலான இருக்கைகள் காலியாகக் காட்சியளிக்கும் விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தவர்களை மேடையில் இருந்த பிரதமர் நெதன்யாகு, “கோழைகள்” எனக் கூறியதுடன், “இந்த அவையில் இருந்து இன்னும் கோழைகள் யாரேனும் இருந்தால் உடனடியாக வெளியேறுங்கள்” எனக் கோவமாக உரையாற்றினார்.

இதில், நெதன்யாகு உரையின்போது சௌதி அரேபியா, சூடான், துனிசியா, உஸ்பேகிஸ்தான், இலங்கை, வங்கதேசன், அல்ஜீரியா, ஈரான், மலேசியா, மாண்டினீக்ரோ, கிர்கிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேறினர்.

ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் உரையின்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Representatives from approximately 71 countries walked out as Israeli PM Netanyahu began his speech at the UNGA.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.