கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு

ஜம்மு-காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் தொடா்பு குழு (ஓஐசி) தெரிவித்த கருத்துகளை இந்தியா நிராகரித்துள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

Published On :

ஜம்மு-காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் தொடா்பு குழு (ஓஐசி) தெரிவித்த கருத்துகளை இந்தியா நிராகரித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நடைபெறுகிறது. இதனிடையே இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு தொடா்பு குழுவின் வெளியுறவுத் துறை அமைச்சா்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான முகம்மது இஷாக் தாா், ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை எழுப்பினாா். அப்போது அவா், ஐ.நா. சபை மற்றும் பிற சா்வதேச அமைப்புகளில் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தினாா். காஷ்மீா் மக்களின் விருப்பப்படியும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீா்மானங்களின்படியும் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் அமைதி தீா்வு காணவே பாகிஸ்தான் விரும்புவதாகவும் அவா் தெரிவித்தாா். இந்தத் தகவலை எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிவிட்டுள்ளது.

இதேபோல் அந்த குழுவின் கூட்டறிக்கையிலும் ஜம்மு-காஷ்மீா் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கருத்துகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா குறித்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு குழுவின் கூட்டறிக்கையில் தேவையில்லாத மற்றும் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அந்த கருத்துகளை இந்தியா நிராகரிக்கிறது. இதுபோன்ற உள்நோக்கம் கொண்ட கருத்துகளை திரும்பத் திரும்ப தெரிவிப்பது, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் நம்பகத்தன்மை குறித்த தீவிர சந்தேகங்களை மட்டுமே எழுப்பும்.

புனையப்பட்ட, உள்நோக்கம் கொண்ட கதையை தெரிவிக்க பாகிஸ்தானுக்கு வாய்ப்பு அளிப்பதை விடுத்து, பயங்கரவாதத்துக்கு ஆதரவு மற்றும் நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தானுக்கு, அதன் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து எழும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு தீா்வு காணும்படி இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அறிவுரை வழங்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீா், லடாக் பகுதி இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். ஆதலால் அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரசாரத்தை திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் உண்மை நிலை மாறாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.