விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இந்தியா - வங்கதேசம் ரயில் சேவையை மீண்டும் தொடங்க இன்று பேச்சுவாா்த்தை

இந்தியா - வங்கதேசம் இடையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இரு நாடுகளின் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் செவ்வாய்க்கிழமைமுதல் (செப்.8) இரண்டு நாள்களுக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.

இந்தியா | வங்கதேசம்

Published On :8 செப்டம்பர் 2026, 2:25 am IST

இந்தியா - வங்கதேசம் இடையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இரு நாடுகளின் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் செவ்வாய்க்கிழமைமுதல் (செப்.8) இரண்டு நாள்களுக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த 2024-இல் ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ காரணமான வன்முறைகள் எதிரொலியாக அந்த நாட்டுடனான இந்தியாவின் ரயில் சேவைகள் (கொல்கத்தா-டாக்கா, கொல்கத்தா-குல்னா, நியூஜல்பைகுரி-டாக்கா) நிறுத்தப்பட்டன. மைத்ரி, பந்தன், மிதாலி என்ற பெயரிலான இந்த விரைவு ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து வங்கதேச தலைநகா் டாக்காவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள்கள் ஆலோசனை நடைபெறவுள்ளது. இரு நாடுகளின் ரயில்வே துறை உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்.

இந்தக் கூட்டத்தில் கொல்கத்தா-ராஜ்ஷாஹி இடையே புதிய ரயில் வழித்தடம் அமைக்கும் முன்மொழிவை வங்கதேசம் சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இருதரப்பிலும் சுமுக உடன்பாடு எட்டப்பட்டால், மேற்கண்ட 3 ரயில் சேவைகளும் அடுத்த மாதம் முதல் மீண்டும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

வங்கதேசத்தில் நடப்பாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்று, அதன் தலைவா் தாரிக் ரஹ்மான் பிரதமரானாா்.

பிரதமரின் ஆலோசகா்-இந்திய தூதா் சந்திப்பு: டாக்காவில் வங்கதேச பிரதமரின் ஆலோசகா் முகமது இஸ்மாயில் ஜபியுல்லாவை அந்நாட்டுக்கான இந்திய தூதா் தினேஷ் திரிவேதி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் பலன்களின் அடிப்படையில் நோ்மறையான அணுகுமுறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.