இஸ்ரேல் சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த நெதன்யாகு!
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாடியதாக பிரதமர் மோடி பேசியது குறித்து...
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி - X | Netanyahu
இஸ்ரேல் சுதந்திர நாளில் தீபமேற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருப்பதாவது, "நண்பரும் இந்திய பிரதமருமான மோடியுடன் உரையாடினேன். இஸ்ரேலின் சுதந்திர நாளில் விமானியுடன் (ஸ்மித் மச்சார்) சேர்ந்து தீபமேற்றி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
இந்த அழைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, தரையிலும் சரி வான்வெளியிலும் சரி - இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறினார். மேலும், இரு நாடுகளுக்கிடையேயான வலுவான உறவு குறித்தும் அவர் நினைவு கூர்ந்தார்" என்று கூறியுள்ளார்.
நெதன்யாகுவுடனான உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்தியா - இஸ்ரேல் இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் உரையாடினோம். மேலும், இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவது குறித்த எங்கள் உறுதிப்பாட்டையும் தெரிவித்துக் கொண்டோம்.
மேற்காசிய நிலவரம் குறித்தும் பேசினோம். மேலும், அமைதி மற்றும் நிலைத் தன்மையை கொண்டுவருவது குறித்து ஆலோசித்தோம்" என்று கூறியுள்ளார்.
Summary
Israel PM Benhamin Netanyahu invites PM Modi to light Independence Day torch
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


