பிரேஸில் அதிபர் தேர்தலில் 4-ஆவது முறையாக வெற்றி பெற்ற லுலா: உலக தலைவர்கள் வாழ்த்து
பிரேஸில் அதிபர் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற 80 வயதான தற்போதைய அதிபா் லூலா டாசில்வாவுக்கு உலக தலைவர்கள் தெரிவித்துள்ள வாழ்த்து குறித்து...

World and Latin American leaders congratulate Lula on Brazil Presidential election victory
பிரேஸில் அதிபர் தேர்தலில் 4-ஆவது முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று அதிபா் பதவியைக் கைப்பற்றிய 80 வயதான தற்போதைய அதிபா் லூலா டாசில்வாவுக்கு லத்தீன் அமெரிக்கா மற்றும் உலகத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பல தலைவர்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இந்த தென் அமெரிக்க நாட்டுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம்: "ஜனநாயகம் வாழ்க! பிரேஸில் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிபர் லுலாவுக்கு வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
பொலிவிய அதிபர் ரோட்ரிகோ பாஸ் பெரேரா: "அதிபர் லுலாவிற்கு எனது வாழ்த்துகள். பொலிவியாவும் பிரேஸிலும் அண்டை நாடுகளாகவும், சகோதர நாடுகளாகவும் உள்ளன; இவை பொதுவான வரலாறு மற்றும் சவால்களைக் கொண்டுள்ளன. நமது உறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கவும் நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்." என வாழ்த்தியுள்ளார்.
பராகுவே அதிபர் சாண்டியாகோ பென்யா: பிரேஸில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லுலாவிற்கு வாழ்த்துகள். இந்த மகத்தான ஜனநாயக திருவிழாவில் பங்கேற்ற பிரேஸில் மக்களுக்கு எனது வணக்கங்கள். பராகுவேயும் பிரேசிலும் ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பொதுவான இலக்குகளைக் கொண்டுள்ளன. மக்களின் நலனுக்காக நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ்: பிரேஸில் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற லுலாவிற்கு வாழ்த்துகள்.
மேலும், "லுலா பிரேஸில் தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயகத்திற்காகவும் உறுதியாக நின்றவர்; வரும் நான்கு ஆண்டுகளிலும் அவர் தொடர்ந்து அவ்வாறே செயல்படுவார்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி: பிரேசில் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட லுலாவிற்கு வாழ்த்துகள். கனடா மற்றும் பிரேஸில் இடையிலான உறவு, நமது கூட்டாண்மையின் கீழ் சிறப்பாக வளர்ந்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்த உறவை மேலும் வலுப்படுத்துவோம். இதன் மூலம் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவோம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம், இரு நாட்டு மக்களுக்கும் அதிக வளத்தை ஏற்படுத்தித் தருவோம் என்று அவர் கூறினார்.
குவாத்தமாலா அதிபர் பெர்னார்டோ அரேவாலோ: தேர்தலில் பெரும் வெற்றி பெற்று மீண்டும் பிரேசில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லுலாவிற்கு வாழ்த்துகள். அத்துடன், தங்கள் ஜனநாயக நிறுவனங்களை உறுதிப்படுத்தும் வகையில் மிகச் சிறந்த தேர்தல் செயல்முறையை முன்னெடுத்த பிரேஸில் மக்களுக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
குவாத்தமாலாவும் பிரேஸிலும் ஒரு பொதுவான நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கின்றன. அதாவது, அரசாங்கமானது பொது நலனுக்காகச் செயல்பட வேண்டும், வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும், ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் மற்றும் மிகவும் நீதியான சமூகங்களை உருவாக்க வேண்டும் என்பதே அந்த நம்பிக்கை.
"லுலா, உங்கள் புதிய பதவிக்காலத்தில், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்," என்று அவர் கூறினார்.
உருகுவே அதிபர் யமண்டு ஓர்சி: தேர்தல் முடிவுகள் வெளியானதும் லுலாவிடம் தொலைபேசியில் பேசி, அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த யமண்டு ஓர்சி, 'எக்ஸ்' பக்கத்தில், "பிரேஸில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரும் எனது நண்பருமான லூலா டாசில்வாவிடம் சற்று முன்புதான் தொலைபேசியில் பேசினேன்."
"அவரது வெற்றிக்கும், ஒரு தேர்தல் செயல்முறை என்பது ஜனநாயகத்தைக் கொண்டாடும் நிகழ்வாக அமைந்ததற்கும் நான் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்," என்று அவர் மேலும் கூறினார்.
லுலாவின் இந்த வெற்றி, ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மீள்வருகையாகும். இடதுசாரித் தலைவரான இவர், இதற்கு முன்பு போல்சோனாரோவிடம் தோல்வியடைந்திருந்த நிலையில், தற்போது தொடர்ந்து நான்காவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, எந்த வேட்பாளரும் வெற்றிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறாததால், தேர்தல் இரண்டாம் சுற்றுக்குச் சென்றிருந்தது.
லூலாடா சில்வா ஏற்கெனவே 2003, 2006, 2022 ஆகிய ஆண்டுகளில் பிரேஸில் அதிபராகப் பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leaders from across Latin America and the world have congratulated Luiz Inácio Lula da Silva on his victory over right-wing candidate Senator
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


