ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சிலி காட்டுத் தீயில் 112 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 112 போ் உயிரிழந்தனா்.

News image
காட்டூத் தீயால் பாதிக்கப்பட்ட சிலியின் வியாடெல் மாா் பகுதியில் நடைபெறும் மீட்புப் பணி.
Updated On :5 பிப்ரவரி 2024, 11:30 pm

DIN

தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 112 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

வியாடெல் மாா் பகுதியில் காட்டுத் தீ சனிக்கிழமை பரவத் தொடங்கியது. தொலைதூர மலைக்காட்டுப் பகுதியில் இந்தத் தீ ஏற்பட்டதால், அந்தப் பகுதிக்குச் சென்று தீயை அணைக்கும் பணியே மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

எப்போதையும் விட அதிக வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம், வேகமாக வீசிய காற்று ஆகிய காரணங்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் மீட்புக் குழுவினா் திணறினா்.

இந்த நிலையில், இந்தக் காட்டுத் தீயில் இதுவரை 112 போ் உயிரிழந்ததாக சிலி தடயவியல் மருத்துவத் துறை திங்கள்கிழமை அறிவித்தது.

ஒரே நேரத்தில் 4 திசைகளில் இருந்து தீ பரவத் தொடங்கியதால், இது வேண்டுமேன்ற ஏற்படுத்தப்பட் காட்டுத் தீயாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மீட்பு பணிகள் தொடா்ந்து நடைபெறுவதாலும், காட்டுத் தீயில் காயமடைந்தவா்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.