பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: இம்ரான் கானுக்கு ஆதரவு அதிகரிப்பு

பாகிஸ்தானின் பொதுத் தேர்தல் நிலவரம் வெளியாகி வருகிறது.
வாக்கு எண்ணும் பணி | AP
வாக்கு எண்ணும் பணி | AP

சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் பொதுத் தேர்தல் வியாழக்கிழமை நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணி அன்றே தொடங்கியுள்ளது.

மோசடி குற்றச்சாட்டு, ஆங்காங்கே வெடித்த வன்முறை, தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகள் முடக்கம் ஆகிவற்றுக்கு இடையில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இம்ரானின் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சின்னத்தில் போட்டியிட நீதிமன்றம் தடை விதித்தால் கட்சி வேட்பாளர்கள் சுயேட்சைகளாக போட்டியிட்டனர்.

ஆட்சியில் இருக்கும் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி பின்தங்கி வருகிறது. அந்த கட்சியின் முன்னாள் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் மற்றும் நவாஸ் ஷெரீப் ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 9 மணி நிலவரப்படி 4 தொகுதிகளை முஸ்லீம் லீக் கைப்பற்றியுள்ளது. 

முஸ்லீம் லீக் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலா 47 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

முதல்கட்ட தேர்தல் நிலவரமாக பாகிஸ்தானின் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகிற குறிப்பில் இம்ரான் கானின் வேட்பாளர்கள் 154 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானின் 266 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று தவிர 265 தொகுதிகளில் 133 இடங்களைப் பெறும் கட்சி ஆட்சி அமைக்க தகுதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com