பாலியல் வழக்கில் பொது மன்னிப்பு வழங்கிய சர்ச்சை: பதவி விலகினார் ஹங்கேரி அதிபர்

ஹங்கேரி நாட்டின் அதிபர் சனிக்கிழமை பதவி விலகினார்.
கட்டலின் நோவாக் | AP
கட்டலின் நோவாக் | AP
Published on
Updated on
1 min read

ஹங்கேரி பழமைவாத கட்சியின் அதிபர் சனிக்கிழமை பதவி விலகினார்.

முன்னதாக குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு உடந்தையாக இருந்தவர் என குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அதிபர் பொது மன்னிப்பு வழங்கியது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து போராட்டங்கள் வெடித்த நிலையில் அவர் பதவி விலகும் அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டார்.

46 வயதான கட்டலின் நோவாக், 2022 முதல் அதிபர் பதவி வகிப்பவர். 

அரசு நடத்தும் குழந்தைகள் இல்லத்தில் நடந்த பாலியல் வன்முறையை மறைக்க உதவிய நபருக்கு அதிபர் அதிகாரத்தின் அடிப்படையில், ஏப்ரல் 2023 இல் பொது மன்னிப்பு வழங்கியது, கடந்த ஒரு வாரமாக மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

அதிபர் அலுவலகத்துக்கு முன்பு போராட்டத்துக்காக திரண்ட மக்கள் | AP
அதிபர் அலுவலகத்துக்கு முன்பு போராட்டத்துக்காக திரண்ட மக்கள் | AP

குழந்தைகள் இல்லத்தில் 2004 முதல் 2016 வரை குறைந்தது 10 குழந்தைகளையாவது பாலியல் ரீதியாக துன்புறுத்திய இல்லத்தின் இயக்குநருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவருக்கு உடந்தையாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரை வாபஸ் வாங்க அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அதிபர் மன்னிப்பு வழங்கியது சமீபத்தில் பொது மக்களுக்குத் தெரிய வந்தது.

இது குறித்து அதிபர், “கருணையின் அடிப்படையிலும் குற்றம் சாட்டப்பட்டவர் அவரை நம்பிய குழந்தைகளை துன்புறுத்தவில்லை என நம்பியதாலும் நான் அவருக்கு மன்னிப்பு வழங்கினேன். நான் தவறு செய்துள்ளேன். நான் யாரையேனும் துன்புறுத்தியிருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் பக்கம் நான் நிற்கவில்லை என கருதியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com