காஸாவின் எதிர்காலம்: இஸ்ரேல் திட்டம் இதுதான்!

இஸ்ரேலின் புதிய காஸா கொள்கை: எதிர்கால அரசியல் வியூகம்
இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேல் ராணுவம்AP

போருக்கு பிறகு காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் குறித்த பரிந்துரையை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அமைச்சரவை பரிசீலனைக்கு முன்வைத்துள்ளார்.

ராணுவம் நீக்கப்பட்ட காஸாவின் பாதுகாப்பையும் மக்கள் விவகாரத்தையும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைக்கவுள்ளது/

துல்லியமான திட்டங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் போருக்கு பிறகு இஸ்ரேலின் காஸாவுக்கான திட்டத்தை முதன்முறையாக பிரதமர் அமைச்சரவை ஒப்புதலுக்கு சமர்பித்துள்ளார்.

2007 முதல் காஸாவின் ஆளுகையில் உள்ள ஹமாஸை வேரோடு அழிக்கவும் இந்த பரிந்துரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காஸா, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை ஆகிய இரு பிராந்தியங்களையும் நிர்வகிக்கும் பாலஸ்தீன தனி அரசு அமைக்க வலியுறுத்திய அமெரிக்காவின் யோசனையை இஸ்ரேல் நிராகரித்திருப்பதுடன் இஸ்ரேல் நாட்டின் நன்மைக்கு காஸாவின் கட்டுப்பாடு தங்களிடம் இருப்பதையே விரும்புவதாகக் கூறப்படுகிறது.

எந்த நாட்டோடும் அமைப்போடும் தொடர்பில்லாத, பணம் பெறாத உள்ளூர் பாலஸ்தீனர்களை காஸாவிற்கான நிர்வாகத்தில் நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் ராணுவம்
புடின் எதிர்ப்பு அடையாளமாகிறார் நவால்னியின் மனைவி! ரஷிய அதிபர் தேர்தல் நேரத் திருப்பங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com