2 ஆண்டுகளுக்குப் பிறகு காஸா எல்லையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்!

எகிப்து உடனான காஸாவின் எல்லை மீண்டும் திறக்கப்படுவது குறித்து...
ரஃபா எல்லை (கோப்புப் படம்)
ரஃபா எல்லை (கோப்புப் படம்)AP
Updated on
1 min read

எகிப்து நாட்டுடனான காஸாவின் எல்லையை மீண்டும் திறக்கவுள்ளதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

காஸாவில், 2023 முதல் நடைபெற்று வந்த இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையிலான போர் கடந்த 2025 அக்டோபரில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்தை ஏற்று இருதரப்பினரும் தாக்குதல்களைக் கைவிட்டனர்.

இந்த நிலையில், போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக எகிப்து உடனான காஸாவின் ரஃபா எல்லையை வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) முதல் மீண்டும் திறக்கவுள்ளதாக, இஸ்ரேல் ராணுவத்தின் கோகாட் பிரிவு அறிவித்துள்ளது. இந்தப் பிரிவு, காஸாவுக்கு வழங்கப்படும் உதவிகளை ஒருங்கிணைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ரஃபா எல்லையின் வழியாக முறையான சோதனைகளுக்குப் பிறகு மக்கள் செல்வதற்கு இஸ்ரேல் மற்றும் எகிப்து அதிகாரிகள் அனுமதிப்பார்கள் என்றும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, போரின்போது வெளியேறிய பாலஸ்தீனர்கள் மீண்டும் காஸாவுக்குள் இஸ்ரேலின் அனுமதிப்பெற்றவுடன் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, காஸாவின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு இஸ்ரேல் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், ஹமாஸ் படைகளிடமிருந்து கடைசி இஸ்ரேலிய பிணைக் கைதியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரஃபா எல்லை (கோப்புப் படம்)
24 மணிநேரத்தில்..! பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகள் கொலை!
Summary

The Israel has announced that it will reopen the Gaza border with Egypt.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com