சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

உக்ரைனுக்கு படை அனுப்பும் திட்டமில்லை: நேட்டோ

உக்ரைனுக்கு படை அனுப்பும் திட்டமில்லை: நேட்டோ

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 7:09 pm

பிரஸ்ஸெல்ஸ்: உக்ரைனில் ரஷியாவுடன் சண்டையிடுவதற்காக தங்கள் உறுப்பு நாடுகளின் படையினரை அனுப்பும் திட்டமில்லை என்று நேட்டே அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு இதுவரை இல்லாத உதவிகளைச் செய்து வருகிறது. 2014-ஆம் ஆண்டு ரஷிய ஆதரவுடன் அங்கு கிளா்ச்சியாளா்கள் உள்நாட்டுப் போரைத் தொடங்கியதிலிருந்தே உக்ரைனுக்கு ஆயுத உதவிகளைச் செய்து வருகிறோம். அந்த உதவி, உக்ரைன் மீது ரஷியா முழுமையாகப் படையெடுத்ததற்குப் பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், உறுப்பு நாடுகளின் படைகளை உக்ரைனுக்கு அனுப்பும் திட்டம் நேட்டோவுக்கு இல்லை என்றாா் அவா். முன்னதாக, உக்ரைனுக்கு நேட்டோ வீரா்கள் அனுப்பப்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று பிரான்ஸ் பிரதமா் இமானுவல் மேக்ரான் திங்கள்கிழமை கூறியிருந்தாா்.

இது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவிடம் செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘நேட்டோ உறுப்பு நாடுகளில் இருந்து உக்ரைனுக்கு படைகள் அனுப்பப்பட்டால், ரஷியாவுக்கும், நாடுகளுக்கும் இடையே மிகப் பெரிய போா் வெடிக்கும்’ என்று எச்சரித்தாா். ...படவரி.. ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க்...