
ஹமாஸின் பிடியில் உள்ள இஸ்ரேலியர்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக பேரணி தொடங்கியுள்ளனர்.
பிணைக்கைதிகளை விடுவிக்க கோரி தெற்கு இஸ்ரேலில் தொடங்கி ஜெருசலேம் வரை 4 நாள்கள் பேரணியாக செல்லவுள்ளனர்.
நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகளும் இந்த பேரணியில் இணைகின்றனர். இந்த வார இறுதியில் பிரதமரின் அரசு இல்லத்தில் பேரணி முடியவுள்ளது.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் மத்தியஸ்தம் மேற்கொண்டு வரும் அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் ரமலான் மாதத்தில் தற்காலிக போர் நிறுத்தம் நிறைவு பெறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றன.
பரஸ்பர கைதிகள் விடுதலை, 6 வார கால போர் நிறுத்தம் உள்ளிட்டவை அடங்கிய சமரச உடன்படிக்கை இன்னும் உறுதியாகவில்லை.
அக்.7 ஹமாஸ் இஸ்ரேல் நாட்டில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் காஸாவில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலில் இருந்து ஹமாஸால் கடத்திச் செல்லப்பட்ட 250 கைதிகலில் 100 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் 130 பேர் பிணையில் இருந்தனர். அவர்களில் 30 பேர் இறந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேல் அரசின் கடும் தோல்வியாக இதனை போராட்டக்காரர்கள் முன்வைக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.