மாயமாகும் பாக். விமான பணிப்பெண்கள்: காரணம் என்ன?

பாகிஸ்தான் விமான பணிப்பெண்கள் மாயம்: கனடாவில் மர்மம் தொடர்கிறது
மாதிரி படம்
மாதிரி படம்Pixabay

பாகிஸ்தான் பன்னாட்டு விமான நிறுவனமான பிஐஏவில் செவ்வாய்க்கிழமை கனடாவுக்குச் சென்ற விமான பணிப்பெண் திடீரென காணாமல் போனதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான டான் தெரிவித்துள்ளது.

மரியம் ராஸா என்கிற பணிப்பெண் இஸ்லாமாபாத்தில் இருந்து கனடாவின் தலைநகர் டொரொண்டோ சென்றுள்ளார். பிஐஏ பாகிஸ்தான் விமானத்தில் பணியில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டும் கராச்சிக்கு இயக்கப்பட்டும் விமானத்தில் பணிக்கு வராமல் மாயமாக மறைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பணிப்பெண்கள் மாயமாவது இது முதல் முறையல்ல. மரியத்தை தேடும்போது விமான அதிகாரிகள் அவரது அறையில் இருந்த குறிப்பு ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதில், “நன்றி, பிஐஏ” என அவர் எழுதியுள்ளார்.

இந்தாண்டில் இதற்கு முன்னர் ஃபாசியா முக்தார் என்கிற பணிப்பெண் காணாமல் போனார்.

கனடா நாட்டுக்குள் நுழைந்தவர்களுக்கு அகதி விண்ணப்பம் அளிக்கும் அரசின் விதிமுறைகளே இதற்கு காரணம் என பாகிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

2019 முதல் தொடர்ந்து வரும் இந்த போக்கினால் கடந்த ஆண்டில் மட்டும் 7 பாகிஸ்தானைச் சேர்ந்த விமான பணிப்பெண்கள் இதே முறையில் காணாமல் சென்றுள்ளதாக டான் நிறுவனம் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com