

பாகிஸ்தானில் ஜே.யு.ஐ.எப் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மானின் வாகனம் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபஸ்ல் (ஜே.யு.ஐ.எப்) தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான். இவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தேரா இஸ்மாயில் கான் வழியாக வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மானின் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் உட்பட அனைத்து நபர்களும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்குப் பிறகு ஃபஸ்லுர் ரஹ்மான், அப்துல் கேலில் உள்ள அவரது மூதாதையரின் வீட்டிற்கு சென்றடைந்தார். அங்கு அவர் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஜே.யு.ஐ.எப்பின் செய்தித் தொடர்பாளர் அஸ்லம் கோரி இந்த தாக்குதலைக் கண்டித்து, இது ஒரு கோழைத்தனமான செயல் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.