ஜப்பான் விமான விபத்து
ஜப்பான் விமான விபத்து

ஜப்பான் விமான விபத்து: 5 பேர் பலி

ஜப்பானில் பயணிகள் விமானம், கடற்படை விமானம் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
Published on

ஜப்பானில் பயணிகள் விமானம், கடற்படை விமானம் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

ஷின் சிட்டோஸ் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் உள்பட 379 பேருடன் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5.17 மணியளவில் ஜப்பான் ஏர்லைன்ஸ் 516 என்ற விமானம் டோக்கியோவின் ஹனேடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

டோக்கியோவில் இந்த விமானம் தரையிறங்கிய போது கடற்படையின் விமானத்தின் மீது மோதியதில் தீப்பற்றி பயங்கரமாக எரியத் தொடங்கியது.

உடனடியாக அவசரகால மீட்புப் படையினர் பயணிகள் விமானத்தில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர். 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை கொண்டு விமானத்தின் தீயையும் கட்டுப்படுத்தினர்.

இந்த நிலையில், கடற்படை விமானத்தின் விமானி தப்பித்த நிலையில், அதில் பயணித்த மற்ற 5 வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டதாக ஜப்பான் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com