கூகுளின் கிளவுட் சேமிப்பை (Cloud Storage)-ன் சந்தாவில் கூகுள் மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது. தரவு சேமிப்பகமாகப் பயன்படும் கூகுள் ஒன் (Google One) எனும் கிளவுடு சேமிப்பு சேவையை கூகுள் அளித்துவருகிறது.
இந்த சேவைக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.130, மற்றும் ஒரு வருடத்திற்கு ரூ.1,300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது கூகுள்.
இதையும் படிக்க: இன்று... சூரியனுக்கு மிக அருகில் பூமி!
ஆரம்ப அளவிலான சேமிப்பக சேவை மூன்று மாதக் கட்டணமாக வெறும் ரூ.100-ஐ கூகுள் அறிவித்துள்ளது. அதிக அளவு சேமிப்பகம் தேவைப்படும் பயனாளர்கள், 200 ஜிபி மற்றும் 2டிபி அளவிலான சேமிப்பை ரூ.50 மற்றும் ரூ.160 விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
கூகுள் ஒன்-னை விளம்பரப் படுத்தும் நோக்கில் இந்த சலுகையை கூகுள் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.