சீட் பெல்ட் அணியாவிட்டால்...: அமெரிக்க விமான நிகழ்வு சொல்லும் செய்தி

போதுமான பரிசோதனைக்குப் பிறகே விமானங்களை இயங்க அனுமதிக்கப்பட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடைந்து விழுந்த விமானத்தின் ஜன்னல் பகுதி | AP
உடைந்து விழுந்த விமானத்தின் ஜன்னல் பகுதி | AP

போயிங் 737 மேக்ஸ் 9 வகை விமானத்தின் ஜன்னல் கதவு நடுவானில் தெறித்து விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதே வகையிலான விமானங்களை உடனடியாக தரையிறக்க அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

போதுமான பரிசோதனைக்குப் பிறகே அவற்றை இயங்க அனுமதிக்கப்பட்டும் என தெரிவித்துள்ளனர். ஒரு விமானத்தைப் பரிசோதிக்க 4 முதல் 8 மணி நேரம் ஆகலாம். கிட்டதட்ட 171 விமானங்கள் உலகம் முழுவதும் உள்ளன.

பாதிப்புக்குள்ளான விமானத்தை இயக்கிய அலாஸ்கா விமான சேவை நிறுவனம், போயிங் 65 737 மேக்ஸ்-9 வகையைச் சேர்ந்த  18 விமானங்கள் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டதாகவும் மீதமுள்ள விமானங்கள் சில நாட்களில் பரிசோதனை முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளது.

ஓரேகான் பகுதியில் இருந்து கலிபோர்னியாவுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்ட போயிங் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் ஜன்னல் கதவு தெறித்து விழுந்தது.

உயிரிழப்போ காயமோ எதுவும் ஏற்படவில்லை எனினும் பயணிகளில் சிலர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

16 ஆயிரம் அடி உயரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் விமானத்துக்குள் இருந்த அலைபேசி உள்ளிட்ட பொருள்கள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. ஜன்னலோரத்தில் பயணிகள் யாரும் அமர்ந்திருக்கவில்லை. இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவனை காற்று இழுத்தபோதும் இருக்கையோடு சீட் பெல்ட்டால் பிணைக்கப்பட்டிருந்ததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

“ஒருவேளை ஜன்னல் அருகே உள்ள இருக்கைகளில் யாரேனும் இருந்திருந்தாலோ அல்லது அந்த இருக்கைக்கு அருகில் சீட் பெல்ட் அணிந்திருக்காவிட்டாலோ இந்தச் சம்பவம் வேறு மாதிரியானதாக முடிந்திருக்கும்” என்கிறார் வான்வழி பாதுகாப்பு துறை பேராசிரியர் அந்தோனி பிரிக்ஹவுஸ்.

போயிங் 737 விமானங்களில் மேக்ஸ் வகை, இரட்டை இன்ஜின் கொண்ட விமானங்கள் புதியவை. அமெரிக்காவில் பயணிகள் போக்குவரத்தில் அதிகளவில் இவை பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com