உலகின் மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலிஃபாவா? இனி இல்லை!

இதன் உயரம் 1000 மீட்டர் (1 கி.மீ / சுமார் 3,281 அடி) இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புர்ஜ் கலிஃபா / கட்டுமானப் பணியில் ஜெட்டாஹ் டவர்
புர்ஜ் கலிஃபா / கட்டுமானப் பணியில் ஜெட்டாஹ் டவர்

உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் புர்ஜ் கலிஃபாவை விட உயரமான கட்டடம் செளதி அரேபியாவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடியும்போது, புர்ஜ் கலிஃபாவை விட உயரமான கட்டடமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

துபையில் கடந்த 2004ஆம் ஆண்டு புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து 6 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் முடியும்போது உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைப் பெற்றது. 

828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபா, உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தமான கட்டடமாக மாறியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் துபையின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடம், எண்ணெய் உற்பத்திக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் துறையில் அதிக லாபம் கொடுக்கும் இடமாக மாறியுள்ளது. 

ஆனால், இத்தனை பெருமைகளுக்குச் சொந்தமான புர்ஜ் கலிஃபா இனி மிக உயர்ந்த கட்டடமாக பார்க்கப்படாது. ஏனெனில் செளதி அரேபியா இதை விட உயர்ந்த கட்டடத்தைக் கட்டும் பணியில் இறங்கியுள்ளது. 

செளதியின் மையத்தில் ஜெட்டாஹ் டவர் அல்லது கிங்டம் டவர் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த உயர்ந்த கட்டடம் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளது. இதன் பணிகள் நிறைவடைந்தால், புர்ஜ் கலிஃபாவை விட உயர்ந்த கட்டடமாக ஜெட்டாஹ் டவர் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

இதன் உயரம் 1000 மீட்டர் (1 கி.மீ / சுமார் 3,281 அடி) இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார ஈர்ப்பை மையமாக வைத்து கட்டப்பட்டுவரும் ஜெட்டாஹ் டவர், உணவகம், தங்கும் விடுதிகள், ஆடம்பர குடியிருப்புகள், அலுவலகங்கள் என பலவற்றை உள்ளடக்கியதாக கட்டப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com